அக்டோபர் 25 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அலெக்ஸ் கேரியை வெளியேற்ற டைவிங் கேட்சை எடுக்க முயன்ற இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது, இதன் விளைவாக அவரது மண்ணீரலில் ஒரு காயம் ஏற்பட்டு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, ஐயர் தொடர்ச்சியான மருத்துவ மேற்பார்வையில் குணமடைந்து வருகிறார்.
அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இந்த மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
