தென் மாவட்டங்களில் “மக்கள் நாயகன்” என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65) என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் ராஜபாளையத்தில் கிளினிக் நடத்தி வந்த இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களிடம் வெறும் ரூ.50 மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்து வந்தார்.
குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இவருக்கு பல தனியார் அமைப்புகளும் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. இந்நிலையில் இவருடைய மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
