100+ பெண்கள் பலாத்காரம்… ரூ. 2 கோடி பிளாக்மெயில்… 65 வயது டாக்டரை அலறவிட்ட நர்ஸ்…. சிக்கிய வீடியோ ஆதாரங்கள்… அதிரவைக்கும் பின்னணி….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது நிரம்பிய மூத்த மருத்துவர் ஒருவர் மீது, அவருடன் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் சுமத்தியுள்ள 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் பெண் நோயாளிகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதற்கு மருத்துவமனையின் இரண்டு ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் அந்தச் செவிலியர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கின் பின்னணியில், அந்த மருத்துவர் அளித்த பணப்பறிப்பு புகாரின் பேரில் காவல்துறையினர் செவிலியரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஊடகங்களிடம் பேசிய அந்தச் செவிலியர், “மருத்துவர் ஒரு தொடர் பாலியல் குற்றவாளி. கடந்த காலங்களில் அவர் மீது அளிக்கப்பட்ட புகார்கள் பண பலத்தால் மறைக்கப்பட்டன. அவர் மீதான பாலியல் வழக்குகளைத் திசைதிருப்பவே என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

   

மறுபுறம், அந்தச் செவிலியர் தனது தனிப்பட்ட புகைப்படங்களை ரகசியமாகப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும், பொய் வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டி சுமார் 2 கோடி ரூபாய் வரை பறித்ததாக மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதில் 35 லட்சம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காசோலைகள் மற்றும் வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு செவிலியர் தம்மைக் தொடர்ந்து கண்காணித்து மிரட்டி வந்ததாகவும் மருத்துவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

   

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தனது அசைவுகளைச் செவிலியர் கண்காணித்து வந்ததாகவும், தனியாக ஒரு மொபைல் போன் மற்றும் சிம் கார்டு வழங்கி திடீரென போன் செய்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள செவிலியர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை.

 

தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் செவிலியர் மீதான மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், மறுபுறம் மருத்துவர் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.