மத்திய அரசின் இலவச வீட்டிற்கான மானியம் பெற வேண்டுமா…? அதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை இதுதான்…

By admin on தை 17, 2025

Spread the love

மத்திய அரசு சாதாரண குடிமக்கள் ஏழை எளிய குடிமக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் வீடற்றவர்களுக்கு சொந்த வீடு கட்ட நிதி உதவியை வங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக ஒரு கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மானியம் வழங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் 2024 அன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

   

சொந்த வீடு இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் சொந்த வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் கடனை பெறும் தனி நபர்களுக்கு கடன் தொகையில் நான்கு சதவீதம் மானியத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 இல் கட்டப்படும் ஒரு லட்சம் புதிய வீடுகளுக்கு 5 ஆண்டு காலப்பகுதியில் ஒவ்வொரு புதிய வீடுகளுக்கும் ரூபாய் இரண்டரை லட்சம் மானியமாக ஒதுக்கப்படும். இதற்காக தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

   

வீடு கட்ட மானியம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற குறிப்பிட்ட தகுதி அளவுகளை பூர்த்தி செய்ய வேண்டும். நகர்ப்புற வீடுகள் மட்டும் இன்றி பிரதமரின் இலவச வீடு வசதி திட்டம் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் நிதி உதவி அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், எஸ்சி எஸ்டி பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்டவர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் ஆறு லட்சம் வரை இருக்க வேண்டும். மேலும் நடுத்தர வருமான குழுக்கள் ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பது லட்சம் வரை இருக்க வேண்டும். இதை பூர்த்தி செய்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறலாம். 20 ஆண்டுகளில் கிராம புற மற்றும் நகர்ப்புற அரசாங்க வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் எந்த பலன்களையும் பெற முடியாது. இந்த திட்டத்தில் மானியம் பெற விரும்புவோர் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா இணையதளத்தில் சென்று பார்வையிட்டு தகுதியான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.