‘அயன்’ படத்தில் சிட்டிபாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? உண்மையை கூறிய நடிகர்… வைரலாகும் செய்தி…

By Samrin on ஆவணி 17, 2023

Spread the love

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில். எம் சரவணன், எம் எஸ் குகன்,  கலாநிதி மாறன் போன்றோர்  தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் அயன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் .இப்படத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன்,  பிரபு, கருணாஸ் , பொன்வண்ணன்,  ரேணுகா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்  இந்த திரைப்படமானது  மாபெரும் அளவில் வெற்றி பெற்ற இப்படம் இன்று வரை சூர்யா முக்கியமான  டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படத்தில் சிட்டிபாபு என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகன்.

   

நடிகர் சூர்யாவுடன் இணைந்து பயணிக்கும் இந்த கதாபாத்திரம் முதல் முதலில் நடிக்க இருந்தது நடிகர்  நடிகர் கிருஷ்ணா தான் இயக்குனர் கே.வி. ஆனந்த் நடிகர் கிருஷ்ணாவிடம் இந்த ரோலில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால், அப்போது நடிகர் கிருஷ்ணா, ‘நான் நடிப்பில் இருந்து விலகப்போகிறேன்’ என கூறியுள்ளார். அதன் பிறகு இந்த வாய்ப்பு ஜெகன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாம். இந்த தகவலை நடிகர் கிருஷ்ணா பேட்டி ஒன்று வெளியிட்டுள்ளார். இவர் சண்டைக்கோழி, கவண் , ஆரம்பம் போன்ற  படங்களில்  நடித்துள்ளார் தற்போது இந்த செய்தியானது  இணையத்தில் வைரலாகிறது.