தளபதி விஜயுடன் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?… அடடே இவர்தானா?… 

By Begam on ஆவணி 2, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதை தொடர்ந்து லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

தளபதி விஜயின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘பூவே உனக்காக’. இத்திரைப்படம் நடிகர் விஜயின் திரை வாழ்க்கையின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது என்றே கூறலாம். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவிந்திருந்தது.

   

 

தற்பொழுது இத்திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் இளவரசுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் இளவரசு இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. இவர் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், குணசேத்திர நடிகர் என பன்முகதன்மை படைத்தவர்.

தற்போது பல திரைப்படங்களில் நடித்துவரும் இவர் களவாணி மாயாண்டி குடும்பத்தார் 2, குருவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்நிலையில் தளபதி விஜயும் நடிகர் இளவரசும் ‘பூவே உனக்காக’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதோ அந்த புகைப்படம்…