Connect with us

தளபதி விஜயின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… இவர் பிரபல நடிகரின் குழந்தையா?… வைரலாகும் புகைப்படம்… இதோ பாருங்க…

CINEMA

தளபதி விஜயின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… இவர் பிரபல நடிகரின் குழந்தையா?… வைரலாகும் புகைப்படம்… இதோ பாருங்க…

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, உன்னை போல் ஒருவன், இவன் வேற மாதிரி, சந்திரா, தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

சொல்லும் அளவுக்கு அறிமுகம் கிடைக்காத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பலராலும் கவனிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிஷா கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள், தற்பொழுது தங்களது குழந்தையுடன் நடிகர் விஜயை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் கணேஷ் வெங்கட்ராமணனின் குழந்தையா இது?’ என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….

Continue Reading
To Top