‘பிக் பாஸ் சீசன் 7னின் ‘ முதல் போட்டியாளர் யார் தெரியுமா? அடடே இவர் தானா…

By Samrin

Published on:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக  கலந்து கொள்பவர்கள்  மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர். ‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

   

முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.தற்போது பிக் பாஸ் 7ம் சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் பரவி வருகிறது.

அதில் முதல் ஆளாக பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தான் வர போகிறார் என கூறப்படுகிறது. ‘பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்’ என செய்தி வாசித்து பாப்புலர் ஆனவர் .  செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் தற்போது இந்த செய்தியானது வைரலாகி வருகிறது.