இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் தெரியுமா?… இவர் ஒரு முன்னணி நட்சத்திரமா?… கண்டுபுடிச்சிடீங்களா…

By Begam

Published on:

பிரபல முன்னணி நடிகர் ராணா டகுபதியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ராணா டகுபதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளரும் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா 1984ல்  சென்னையில் தமிழ்நாட்டில் பிறந்தார்.

   

இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டக்குபாதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேஷ் வின் மருமகன் ஆவார்.இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார் இத்திரைப்படத்தில் இவர் நடித்த ‘பல்லாள தேவன்’ கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது.

இதைத்தொடர்ந்து நடிகர் ராணா தற்பொழுது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் ராணா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவரது மனைவி நடிகர் ராணாவின் சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘நடிகர் ராணாவா இது? சின்ன வயசுலயே இவ்வளவு க்யூட்டா இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….