#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தின் டீசரில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது. அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர்.
VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. தற்பொழுது அவரின் புகைப்படமும், சமீபத்தில் அவர் அயலான் படம் குறித்து பேட்டியளித்துள்ள வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த நடிகரின் பெயர் வெங்கட் என்றும் கூறப்படுகிறது. இதோ அவரின் பேட்டி வீடியோ…
மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…