அசைவமா?.. NO NEVER… சைவத்தை மட்டுமே விரும்பும் 5 கோலிவுட் பிரபலங்கள் யார் தெரியுமா?… தமன்னா, மாதவன் இந்த லிஸ்ட்ல நீங்களுமா?…

By Begam on ஆவணி 25, 2023

Spread the love

நடிகர், நடிகைகள் எப்பொழுதும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவது வழக்கம். அதற்காக அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வதும், உணவுகளை தகுந்த முறையிலும் எடுத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான நடிகர், நடிகைகள் சைவத்தை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?…  இந்த பதிவில் சைவத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும் ஒரு நடிகர் நடிகைகளை குறித்து நாம்  பார்க்கலாம்.

1. மாதவன்:

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர்  இயல்பிலேயே இவர் சைவம் உண்ணும் பழக்கம் உடையவர். இவருக்கு தனது வீட்டில் வைக்கப்படும் சாம்பார் சாதம், உருளைக்கிழங்கும் மிக பிடித்த உணவாம்.

   

 

2.தமன்னா:

பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் ஆடிய காவாலா பாடல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடிக்கச் செய்துள்ளார். இவர் தற்பொழுது சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறாராம்.

3.திரிஷா :

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. திரையுலகில் அறிமுகமாகி 24 ஆண்டுகளாக நிறைவடைந்து விட்டது. தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறார். நடிகை திரிஷாவுக்கு சைவம் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அவர் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு தோசையும் சாம்பாரும் தானாம்.

4.ஷ்ரேயா சரண்:

திரையுலகின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக தற்பொழுதும் வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். 40 வயதை கடந்து, ஒரு குழந்தையும் இவ்வளவு அழகாக இவர் இருக்க காரணம்  அவர் எடுத்துக் கொள்ளும் சைவ உணவுகள் தான் என்று கூறப்படுகிறது.

5.சூர்யா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு மிகப் பிடித்த உணவு தயிர் சாதம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால் நடிகர் சூர்யா முட்டை கூட சாப்பிட மாட்டாராம்.  அந்த அளவிற்கு இவருக்கு சைவ உணவுகள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.