உலகத்தைச் சுற்றும் நடிகர் அஜித் இப்ப எங்க இருக்காரு தெரியுமா?…. மனைவி ஷாலினி வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்…

By Begam

Updated on:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித் ஏ கே மோட்டோ ரைடு எனும் நிறுவனம் ஒன்றை  தொடங்கினார். இவர் சமீபத்தில் கூட நேபாளத்திற்கு பைக் ரைடு சென்றிருந்தார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது. நடிகர் அஜித் நடிகை  ஷாலினியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. இவர் அவ்வப்பொழுது நடிகர் அஜித்தை பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  அந்தவகையில் தற்பொழுது நடிகர் அஜித் ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு பைக் ரைடு சென்றிருப்பதாக புகைப்படத்துடன் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு…