சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் வந்த குட்டி ரஜினி இப்ப என்ன செய்றார் தெரியுமா?…!!!

By Begam on புரட்டாதி 7, 2022

Spread the love

90 காலகட்டத்தில் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியான படங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ‘படிக்காதவன்’. இப்படத்தில் நடிகர் சிவாஜி நடித்துள்ளார்.

   

இந்தப் படத்தில் குட்டி ரஜினி ஆக வந்த சிறுவனை யாராலும் மறக்க முடியாது.அவ்வளவு அழகான தத்ரூபமான நடிப்பை அந்த சிறுவன் வெளிப்படுத்தி இருப்பார் . அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை தெலுங்கு இயக்குனர் ‘சூரிய கிரன்’ தான்.

   

இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜயகாந்த் பிரபு போன்ற பல பிரபலங்களுடன் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அதிக விருதுகளை வென்றுள்ள இவர் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த மௌன கீதங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் அண்ணன். சூரிய கிரன் நடிகை கல்யாணியை திருமணம் செய்து கொண்டார். நடிகை கல்யாணி சமுத்திரம், புன்னகை பூவே என்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் சிறு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடிகராக, தற்பொழுது இயக்குனராக சினிமா துறையில்  நிலைத்து நிற்கிறார் இயக்குனர் சூரிய கிரண்.