சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..? 

By Begam on ஏப்ரல் 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Surya

#image_title

முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர்  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி என  பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து, தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

   
   
Surya

#image_title

 

இந்நிலையில் தற்பொழுது நடிகை ஜோதிகா தனது தோழி ஒருவருடன் இமயமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய இதை பார்த்த ரசிகை ஒருவர் , ‘சூர்யா நீங்க இல்லாத இந்த நாட்களில் சந்தோசமாக இருப்பார்’ என கமெண்ட் செய்ய, உடனே ஜோதிகா அந்த கமென்டிற்கு ,’நீங்க இப்படியே நெனச்சுக்கிட்டு இருங்க’ என்றும், ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்ல. அதனால தான் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கீங்க ‘ என்றும் கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)