இணையத்தில் பரவி வரும் ஒரு செய்தி, பலரின் நம்பிக்கையாகியுள்ளது. ATMமில் பணம் எடுப்பதற்கு முன், இரண்டு, மூன்று முறை கேன்சல் பட்டனை அழுத்தினால், உங்கள் பணம் திருட்டுப் போவதை தடுக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை.
இந்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB)வின் உண்மை கண்டறியும் குழு, இந்த தகவலை ஆராய்ந்து, இரண்டு முறை cancel பட்டனை அழுத்துவதால், உங்கள் PINனுக்கு எந்த வித கூடுதல் பாதுகாக்கும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. நீங்கள் ஒரு பரிவர்த்தனையை தொடங்கும் போது, அதை பாதியிலேயே நிறுத்த விரும்பினால், cancel பட்டனை கிளிக் செய்யலாமே தவிர, இதன் மூலம் ரகசிய PIN திருட்டை தடுக்க முடியாது. PIN திருட்டு பெரும்பாலும் ATMமில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர்கள்(skimmer), ரகசிய கேமராக்கள் அல்லது அருகில் நின்று கவனிப்பவர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. வெறும் cancel பட்டனை கிளிக் செய்வதன் மூலம், ஒரு பயனும் கிடையாது. உங்கள் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றால், நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
- ATM மிஷினில் ரகசிய எண்ணை உள்ளிடும்போது, உங்கள் கைகளால் keyboard ஐ மறைத்துக்கொள்ள வேண்டும்.
- ஸ்கிம்மர்கள் போன்ற ரகசிய சாதனங்கள் ஏதேனும் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
- பாதுகாப்பான இடங்களில் உள்ள, செயல்படும் திரை கொண்ட ATMகளை உபயோகிக்க வேண்டும்.
- பரிவர்த்தனைகள் குறித்த உடனடி அறிவிப்புகளை பெற SMS Alertஐ எப்போதும் ஆக்டிவா வைத்திருக்க வேண்டும்.
- ரகசிய எண்ணை யாருக்கும் ஒருபொழுதும் பகிரக்கூடாது.
- ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கும் ரகசிய எண்ணை மாற்ற வேண்டும்.
- 1234 / பிறந்த தேதி போன்ற எளிமையான ரகசியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- ATM அட்டை தொலைந்து விட்டால், உடனடியாக வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டும்.
