lingad

சிக்கன் மட்டன் மீன் எல்லாமே சும்மா… உலகின் சக்திவாய்ந்த காய்கறி பற்றி தெரியுமா…?

By Meena on டிசம்பர் 23, 2024

Spread the love

நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்றால் எல்லா விதமான ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பாஸ்ட் புட் மோகத்தால் தான் இருக்கின்றனர். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவது தான் ட்ரெண்ட் என்று நினைத்து செய்கின்றனர். ஆனால் இந்த வகை உணவுகளை சாப்பிடும் போது அது துளி அளவும் கூட நம் உடம்புக்கு நன்மை தராது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் நாவின் ருசிக்காக அதையே செய்கின்றனர். ஆனாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் ஓரளவு உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

   

சிறுதானிய உணவுகள் சத்தான உணவு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள மக்கள் பழகி இருக்கிறார்கள். ஒவ்வொரு விதமான உணவுகளில் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கும். சிக்கன் மீன் முட்டை மட்டன் நண்டு கீரை வகைகள் பால் சார்ந்த பொருட்கள் சைவ அசைவம் என ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் ஒரு தனித்தன்மையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. கால்சியம் புரதம் வைட்டமின் போன்ற சத்துக்கள் அத்தியாவசியாமாக நம் உடல் இயங்குவதற்கு தேவை. ஆனால் இந்த அசைவ உணவு சைவ உணவுகளுக்கும் ஒரு படி மேலாக போய் ஒரே ஒரு காய்கறியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதுதான் உலகின் சக்தி வாய்ந்த காய்கறி என்று கூறப்படுகிறது. அதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

   

லிங்கட் எனப்படும் இந்த காய்கறி வகை தான் இறைச்சி மீன் மற்ற காய்களை விட எண்ற் சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காய்கறி உத்தரகாண்ட் இமாச்சல் மற்றும் அல்மோரா மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த லிங்கட் காய்கறியில் வைட்டமின்கள் கால்சியம் நார்ச்சத்துக்கள் தாதுக்கள் இரும்பு மற்றும் புரதம் போன்ற பிற வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இந்த காய்கறியை சாப்பிடுவதால் ரத்த குறைபாடு புற்றுநோய் இதய நோய் நீரழிவு ரத்த கொதிப்பு போன்ற பல நோய்களைத் தடுக்கும் திறன் இதில் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

 

இந்த காய்கறியை மலைப்பகுதியை சேர்ந்த மக்களும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். இதில் அமிலம் வைட்டமின் சி போலேட் பாஸ்பரஸ் என இதில் இல்லாத ஊட்டச்சத்துக்களை இல்லை என்று சொல்லலாம். புற்றுநோய் இருப்பவர்கள் கூட இந்த காய்கறியை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த காய்கறியை பொரியல் மாதிரி செய்தும் அல்லது ஊறுகாய் வடிவில் செய்தும் அங்குள்ள மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். ஒரே காய்கறியில் இத்தனை சத்துக்களா என்று இந்த காய்கறியின் மவுசு தற்போது அதிகரித்து வருகிறது.