#image_title
நாம் கடைகளில் பழங்கள் வாங்குவதற்கு சென்றிருப்போம். அப்போது பழக்கடைகளில் ஆப்பிள், மாம்பழம், கிவி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். நாம் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து இது உயர் ரக பழங்கள் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் கடந்து விடுவோம். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. பழங்களின் மேல் ஸ்டிக்கர் எதனால் ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது விலை கூடுதல் ஆனது என்று நாம் நினைக்கலாம். ஆனால் காரணம் அதுவல்ல பழங்களின் தரம் விலை மற்றும் செயல்முறை எப்படி விளைவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இந்த ஸ்டிக்கர் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த ஸ்டிக்கர்களை கொண்டு வந்து இருக்கிறது. இதை ஸ்டிக்கர்களை நாம் பார்ப்பதன் மூலம் அந்த பழத்தின் தரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த பழங்களின் மேல் உள்ள ஸ்டிக்கர்கள் பழத்தின் தரத்தை மட்டுமல்லாது அவை இயற்கையான முறையில் வளர்க்கப்பட்டதா பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு இருக்கிறதா இல்ல மரபணு மாற்ற முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறதா ஆகிய தகவல்களை அது கொண்டிருக்கும். இது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதும் ஆகும்.
பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் எட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து இலக்க எண்கள் அந்தப் பழங்கள் மரபணு மாற்ற முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும். நான்கு இலக்க எண்களை அந்த ஸ்டிக்கரில் கொண்டு இருந்தால் அது பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வளர்க்கப்பட்டது என்பதை குறிக்கும். இந்த வகை பழங்களை சாப்பிடுவதற்கு முன்பாக தோல் நீக்கியோ அல்லது கழுவி சாப்பிடுவது அவசியமானது என்பதை இது உணர்த்துகிறது.
ஒன்பதில் தொடங்கும் எண்களை கொண்ட ஸ்டிக்கர்கள் அந்த பழங்கள் இயற்கையான முறையில் எந்த பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் இல்லாமல் வளர்க்கப்பட்டது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆகையால் இனி கடைகளில் நீங்கள் பழங்கள் வாங்க போம்போது அதில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் அதை கடந்து செல்லாமல் அதில் என்ன மாதிரி எண்கள் ஒட்டி இருக்கிறது என்பதை பார்த்து வாங்குங்கள்.
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…