vijayakanth

கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வர முக்கிய காரணம் என்ன தெரியுமா…? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்…

By admin on மார்கழி 28, 2024

Spread the love

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பணியற்றிய பிரபலமான நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவரும் ஆவார். 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் விஜயகாந்த்.

   

அருப்புக்கோட்டையில் பிறந்து மதுரையில் பள்ளி படிப்பை முடித்தவர் விஜயகாந்த். சிறு வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததால் படிப்பில் ஆர்வம் காட்டாமல் சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். இவரது தோற்றத்தையும் கருமை நிறத்தையும் தோற்றத்தையும் பார்த்து யாருமே வாய்ப்பு தரவில்லை. பல முன்னணி நடிகைகள் இவர் கருப்பாக இருந்ததால் இவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கின்றனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு 1979 ஆம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜயகாந்த்.

   

தொடர்ந்து மெல்ல மெல்ல தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அகல் விளக்கு, சிவப்பு மல்லி ,சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தால், ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தார் விஜயகாந்த். பிறகு இவருடன் நடிக்க வேண்டும் என்ற பல நடிகைகள் விருப்பப்பட்டார்கள்.

 

விஜயகாந்த் நல்ல குணம் படைத்த மனிதர் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புபவர். தன்னை சுற்றி இருப்பவர்களுக்காக பல உதவிகளை சென்றவர். தன்னை தேடி வருபவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்பமாட்டார். முழு நேரமும் சாப்பாடு போட்டு அனுப்புவர் விஜயகாந்த். பிறகு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு விருதாச்சலம் தொகுதியில் தேர்தல் என்ற போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கான முக்கிய காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதைப்பற்றி நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதாவது விஜயகாந்த் நடிக்கும் போது சட்டம் ஒரு இருட்டறை, போலீஸ் கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் நடிக்கும் போது விஜயகாந்த் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். குறிப்பாக சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் ஏழைகளுக்கு சட்டம் இருட்டாகவும் பணக்காரர்களுக்கு வெளிச்சமாகவும் இருப்பதை போன்ற காட்சிகள் அவரது மனதை மிகவும் கலங்க செய்தது.

இதைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டே இருந்தாராம். எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக அரசியலில் களமிறங்கி பணியாற்றுவோம் நாம் புதிய மாற்றங்களை கொண்டு வருவோம் என்ற காரணத்தினால் தான் விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கி பணியாற்றினார் என்று கூறியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.