Categories: சினிமா

யுவன் அணிந்திருக்கும் இந்த வாட்சின் விலை இவ்வளவா.. அப்படி இதுல என்ன தான் இருக்கு..?

Spread the love

இசைஞானி இளையராஜாவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து கார்த்திக் ராஜா, பவதாரணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். இதில் கார்த்திக் ராஜாவுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால் இளையராஜாவின் வழியில் வெற்றிகரமான இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் அவரின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜாதான்.

அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், தற்போது கோட் படம் வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் யுவன் ஷங்கர் ராஜாதான். தன்னுடைய 16 ஆவது வயதில் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவர் அரவிந்தன் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் அவரை ஒரு இசையமைப்பாளராக அடையாளம் காட்டியது வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட்டானாலும் படம் ப்ளாப் ஆனது.

இப்படி 2000 களின் தொடக்கம் வரை யுவன் இசையமைத்த படம் எதுவுமே ஹிட்டாகவில்லை. அதனால் அவரை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று முத்திரைக் குத்தினர். அதனால் அவருக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு தீனா படத்தின் வாய்ப்பை  வழங்கியுள்ளார் அஜித். தனக்குப் படங்கள் வராதது குறித்து சோகத்தில் இருந்த யுவனை நேரடியாக வீட்டுக்கே சென்று சந்தித்த அஜித் “யுவன் உன்னை நம்பி நான் இந்த படம் தர்றேன்” என சொல்லி வாய்ப்பை வழங்கியுள்ளார். அந்த படம்தான் யுவனுக்கு வணிக ரீதியான ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது.

 

தற்போது தொடர்ந்து சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பயணித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் அணிந்திருந்த வாட்ச் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் audemars piguet என்ற விலை உயர்ந்த வாட்சை அணிந்திருந்தார். இது ஒரு ஆட்டோமேட்டிக் வாட்ச் ஆகும். இதன் விலை சுமார் 80,20,794 ரூபாய் ஆகும்.
Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

16 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

42 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

53 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago