Categories: சினிமா

கோலிவுட்டின் “கான்ட்ரவர்ஸி குயின்” இவர் தான்… நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சினிமா பின்புறம் இல்லாத குடும்பத்தில் இருந்து வருந்து மெல்ல அடி எடுத்து வைத்து ஹீரோக்களுக்கு இணையாக தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக உயர்ந்திருக்கிறார் நயன்தாரா. நடிகைகள் என்றாலே அவர்களை சுற்றி சர்ச்சைகள் இருக்கும். அப்படி நயன்தாராவும் தனது சினிமா பயணத்தில் பலவித சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

முதலில் நயன்தாரா சிக்கிய சர்ச்சை என்னவென்றால் சிம்புவுடன் ஆன காதல். வல்லவன் திரைப்படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்தனர். அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாது. அதற்கு அடுத்ததாக இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள்.

அதற்கு அடுத்ததாக நயன்தாரா சிக்கிய சர்ச்சை என்னவென்றால் சிம்புவை தொடர்ந்து ஏற்கனவே திருமணம் ஆன நடன அமைப்பாளர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் அவரை எப்படி இவர் காதலிக்கலாம் ஒரு குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்ற அளவுக்கு பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தார் நயன்தாரா. அந்த நேரத்தில் பிரபுவின் பெயரை தன் கையில் பச்சை குத்தியிருந்தார். அந்த அளவுக்கு தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதுவும் ஒரு சில காலத்துக்கு பிறகு பிரேக்கப் ஆனது.

அடுத்ததாக நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்திற்காக விருது வாங்க மேடை ஏறிய போது அங்கு விருது வழங்க வந்த அல்லு அர்ஜுனனின் கையால் விருது தாங்காமல் தவிர்த்து விக்னேஷ் சிவன் கையினால் விருது வாங்கினார். இதனால் அல்லு அர்ஜுன் நயன்தாராவுடன் நடிக்கவே கூடாது என்ற முடிவெடுத்துவிட்டார் என்ற செய்திகளும் வெளியாது.

அடுத்ததாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது இவர் திருப்பதிக்கு சென்றார். திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு செல்லும் போது அங்கு எடுத்த புகைப்படத்தில் இவர் காலணி அணிந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

திருமணம் முடிந்த ஐந்தாவது மாதத்திலேயே இருவரும் தந்தை தாய் ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்று அறிவித்திருந்தனர். திருமணம் முடிந்த உடனே எப்படி குழந்தை பிறந்தது என்று கேள்வி கேட்டு அந்த நேரத்தில் இது பெரிய சர்ச்சையா ஓடிக் கொண்டிருந்தது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று நயன்தாரா விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தாலும் மேலும் மேலும் இது பிரச்சினை அந்த நேரத்தில் வளர்ந்தது.

வாடகை தாயின் மூலம் ஒரு தம்பதி குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் திருமணம் ஆகி 5 வருடங்களை நிறைவு செய்திருக்க வேண்டும் இருவர் உடலில் ஒருவருக்கு ஏதாவது குறை இருந்தால் தான் அப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என பல ரூல்ஸ்கள் இருக்கிறது. இதனால் நயன்தாரா சிறைக்கு செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என்ற அளவுக்கு சர்ச்சைகள் வெளியாகின.

நயன்தாரா சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவரது முகம் வேற மாதிரி இருக்கும். தற்போது அவருடைய முகத்தின் வடிவம் வேற மாதிரி இருக்கும். இதனால் நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் அழகாக இருக்க ஏதாவது முகத்திற்கு செய்திருக்கிறார் என்று பல சர்ச்சைகள் வெளியாகின. இதற்கு ஓப்பனாகவே நயன்தாரா பதிலளித்தார். பிளாஸ்டிக் சார்ஜரி நான் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு அடுத்தாக தற்போது தனுஷ் உடனான காப்பிரைட் விகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா.

தனுசிடம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் பகத் பாஸில் படத்தில் பயன்படுத்தப்பட்ட கரிங்காலில்லேல்பத்தை தனது பிசினஸுக்கு பயன்படுத்தியதற்காக அந்த ஆல்பத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தனுஷ் இடம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இதே பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் நயன்தாரா. இதுபோல பல சர்ச்சைகளில் சிக்கி இருப்பதால் இவரை கான்ட்ரவர்ஸி குயின் நயன்தாரா என்று அழைக்கின்றனர்.

admin

Recent Posts

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

5 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

12 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

16 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

21 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

52 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

1 மணத்தியாலம் ago