இது உங்களுக்கு தெரியுமா..? தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி உருவாகிறது..? இதோ வியக்கவைக்கும் அறிவியல் உண்மை..!!

By Hema on ஆவணி 3, 2025

Spread the love

கோடை காலத்தில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்க்கும் இளநீரால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதில் சோடியம் ,பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்கள் காணப்படுகின்றன.இது உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது.

இத்தனை நன்மைகள் கொண்ட இளநீரில் இருக்கும் தண்ணீர் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் தேங்காயில் காணப்படும் நீரானது மரத்தின் வேர்கள் வழியாக தென்னைக்குள் நுழைகிறது, இது மண்ணிலிருந்து தண்ணீரை உறிஞ்சும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட நீர் மரத்தின் வாஸ்குலர் அமைப்பு குறிப்பாக சைலம் திசுக்கள் வழியாக சென்று வளரும் தென்னைக்கு கொண்டு செல்கின்றன. பின்பு தென்னைக்குள் நீர் குவிந்து, வளரும் விதைக்கு ஊட்டமளிக்கும் திரவ எண்டோஸ்பெர்மை உருவாக்கிறது.

   

இந்த திரவ எண்டோஸ்பெர்ம் என்பது தேங்காயை வளர்க்கும் ஊட்டச்சத்து நிறைந்த திரவமாக அறியப்படுகிறது. இது தென்னை மரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு தேங்காயில் சேமிக்கப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரவமாகும் . இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும்  மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன. தேங்காயில் காணப்படும் நீர், பழத்தால் உறிஞ்சப்பட்ட மழைநீர் அல்லது கடல் நீர் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.