#image_title
இந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கிய இடத்தை சினிமா பிடித்திருக்கிறது. அதேபோல் நடிகர் நடிகைகளுக்கும் இந்தியாவில் மவுசு அதிகம் தான். தங்கள் விருப்பப்பட்ட நடிகர்கள் படங்களை தியேட்டருக்கு சென்று ஜாலியாக படம் பார்ப்பதை பலர் விரும்புவர். அதுவும் தியேட்டருக்கு சென்று ஒரு பாப்கானை வாங்கி சாப்பிட்டால் தான் படம் பார்த்த திருப்தி இருக்கும் என்று பலர் கூறுவர். வேறு எங்கிலும் சாப்பிடுவதை விட இந்த தியேட்டரில் கிடைக்கும் Popcorn இன் ருசியை அடிச்சுக்கவே முடியாது.
நன்கு சுடச்சுட பொறித்தெடுத்த மக்காச்சோளத்தில் கொஞ்சம் உருக்கியா வெண்ணையை ஊற்றி அதன் மீது சுவையூட்டும் பொடிகளை தூவி நன்கு குலுக்கி தியேட்டரில் அமர்ந்து கொண்டு அந்த இருட்டு அறையில் நமக்கு விருப்பமான நாயகர்களின் படத்தை பார்த்துக்கொண்டே அந்த Popcorn ஐ சாப்பிட்டால் உலகில் இதை விட வேறு ஏதும் இன்பம் உண்டா என்று நினைக்க தோன்றும். தியேட்டருக்கு செல்லலாம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது Popcorn தான். அப்படி இந்த தியேட்டருக்குள் Popcorn கலாச்சாரம் வந்தது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.
மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளைக் கொண்ட மத்திய அமெரிக்கா தான் Popcornனின் தாயகமாக கருதப்படுகிறது. ஏனென்றால் 1800களில் அங்கு தான் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டது. அங்கு விளைச்சல் அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி எந்த ஒரு கூடுதல் செலவும் இன்றி வறுத்தெடுத்து எளிமையாக செய்யக்கூடிய இந்த பாப்கான் அந்த நேரத்தில் விருப்பமான தின்பண்டமாக மாறியது.
அதைத்தொடர்ந்து பிரத்யேகமாக சிகாகோவில் சார்லஸ் க்ரெட்டாஸ் என்பவர் நீராவி எந்திரம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் பின்னர் பிரபலமான பாப்கார்ன் விற்பனை கண்காட்சிகள் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தெரு விழாக்கள் திரையரங்குகளில் என அனைத்திலும் விற்பனை செய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தியேட்டரில் Popcorn ஐ தான் விற்பனை செய்தார்கள். அதை தொடர்ந்து தான் குளிர்பானங்கள் மிட்டாய்கள் மற்ற தின்பண்டங்களை சேர்த்தார்கள். இரண்டாம் உலகப் போர் நடந்த போது வீரர்களுக்காக சர்க்கரை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மிட்டாய்கள் குளிப்பானங்கள் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டது தடைப்பட்டது. அப்போது Popcorn தான் பிரதான தின்பண்டமாக தியேட்டர்களில் இடம் பிடித்தது.
அப்போது அமெரிக்காவில் பிரபலமாக இருந்த இந்த Popcorn கலாச்சாரம் 1930 40 காலகட்டத்தில் மெல்ல மெல்ல பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இப்படி அந்த காலத்தில் ஆரம்பித்த இந்த பாப்கான் கலாச்சாரம் இன்று வரை தியேட்டர்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது. படம் பார்க்க செல்லும் முன்னரே ஒரு பக்கெட் Popcorn ஐ வாங்கிக்கொண்டு உள்ளே செல்பவர் பலர் இருக்கிறார்கள். அப்படி இதற்கு பல ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…