CINEMA
பிக் பாஸ் வீட்டில் 28 நாளுக்கு வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..? தின்னுட்டு தூங்குனதுக்கே இவ்ளோவா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது உள்ளே சென்றுள்ள வைல்ட் கார்டு என்ட்ரிகளால் கலைகட்ட போகிறது பிக் பாஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்தவர்களை வைச்சு செய்து வருகின்றனர் ஏற்கனவே உள்ளிருந்த பிக் பாஸ் ஹவுஸ்மாட்ஸ். இதனால் தற்பொழுது பெரிய கலவரமே அங்கு நடந்து வருகிறது.
தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய வினுஷா மற்றும் யுகேந்திரனின் சம்பளம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் மொத்தமாக 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கின்றனர் என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் வினுஷாவிற்கு ஒரு நாளைக்கு மட்டும் 20000 சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
அதன்படி பார்த்தால் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த வினுஷாவிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரத்தை சம்பளமாக வாங்கியுள்ளாராம். அதன்படி பார்த்தால் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த யுகேந்திரனுக்கு 7 லட்சத்து 56 ஆறாயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.