பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் எப்படி இறந்தார் தெரியுமா?… அடடே அவருக்கு இப்படி ஒரு நோய் இருந்ததா?….

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் 1953-ல் ‘ஔவையார்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு “திருக்கல்யாணம்’ படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு,

   

குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஓமக்குச்சி நரசிம்மர். இவரது காமெடி ரசிகர்களை சென்றடைய ஒரு முக்கிய காரணம் இவரின் உடல் அமைப்பு மற்றும் முக பாவனைகள் என்றே கூறலாம்.

இதை தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் தொடங்கி விஜய் அஜித் வரை நடித்து அசத்தியுள்ளார் நடிகர் ஓமக்குச்சி. இவர் 14 மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இறுதியாக இவர் நடிப்பில் 2006 இல் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்’ திரைப்படம் வெளிவந்தது.

இதைத்தொடர்ந்து நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் 2009இல் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு அதன் காரணமாக தனது 73 வயதில் மரணம் அடைந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். மேலும் இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால் இதுவரை அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானது கிடையாது. இவருடைய மகன் சாமியாராக  தற்பொழுது சென்னை திருவல்லிக்கேணியில் இருப்பதாக கூறப்படுகிறது.