15 வருட பகை… நெப்போலியன்- விஜய் மோதல்… என்ன நடந்தது தெரியுமா…?

By admin on தை 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

   

பின்னர் தனது 18-வது வயதில் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய். தொடர்ந்து 1990 காலகட்டத்தில் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். 2000 கால கட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமான புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வந்தார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் படம் வெளிவந்தாலே ஹிட் தான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தார்.

   

தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அரசியலில் களமிறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்து அதன் பணிகளை பார்த்து வருகிறார். இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார்.

 

இந்நிலையில் விஜய் நடித்த வெற்றி படங்களில் ஒன்றுதான் போக்கிரி. இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்து மக்களிடத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் நெப்போலியன் விஜயுடன் இணைந்து நடித்திருப்பார். அப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நெப்போலியன் மாற்றம் விஜய்க்கு இடையே ஒரு மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதையும் நெப்போலியன் ஒரு நேர்காணலில் எனக்கும் விஜய்க்கும் ஒரு பிரச்சனை என்று மறைமுகமாக தான் கூறியிருப்பார். என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

தற்போது தயாரிப்பாளர் பாலாஜி நெப்போலியன்க்கும் விஜய்க்கும் நடந்த மோதலை பற்றி கூறியிருக்கிறார். அது என்னவென்றால் போக்கிரி பட சூட்டிங் நடுவில் விஜய் கேரவனில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது விஜயை காண நெப்போலியன் சென்றிருக்கிறார். அப்போது வெளியே இருந்த காவலாளர்கள் அவரை தடுத்து இருக்கின்றனர். நெப்போலியன் நான் பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்டு இருக்கிறார். உடனே கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய் எதுக்கு இப்படி நான் ரெஸ்ட் எடுக்கிற டயத்துல சத்தம் போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

உடனே நெப்போலியன் இல்ல தம்பி நான் உங்கள பாக்கணும்னு தான் நான் வந்தேன் என்று கூறுகிறார். அதுக்கு விஜய் அநாகரிமா இப்படித்தான் சத்தம் போடுவீங்களா என்ற விஜய் கேட்டிருக்கிறார். இல்ல தம்பி நம்ம பழகுறோம் வேலை பார்க்கிறவங்க உரிமையில் தான் நான் அப்படி வந்தேன் என்று கேட்டிருக்கிறார். அப்போது விஜய் உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை நான் உங்க தம்பியும் இல்லை endru மிகவும் கடுமையாக திட்டி விட்டதாகவும் அதனால் தான் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பகை 15 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது இன்னும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.