சொந்த வீடு அமைய வேண்டும் என்று ஆசையா…? இந்த எளிய பரிகாரங்களை கடைபிடியுங்க…

Spread the love

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கு இருக்கிறது. இன்றைய விலைவாசி உயர்வில் வாங்குகிற சம்பளத்தில் மிச்சம் பிடித்து வீடு வாங்குவது என்பது மிகப்பெரிய கடினமான காரியம்தான். முறையான திட்டமிடல் இருந்தால் அதை சாத்தியமாக்க முடியும். அதையும் தாண்டி நமக்கு நல்ல நேரம் இருக்க வேண்டும். நல்ல நேரம் இருந்தால் எல்லாமே நல்லதாக அமையும். அப்படி நல்ல நேரம் வீடு வாங்குவதற்கு கைகூடவில்லையே தடங்கலாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் இந்த எளிய பரிகாரங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நேரங்கள் கூடி வந்து வீடு வாங்கும் யோகம் அமையும். அதைப் பற்றி இனி காண்போம்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி மகாவிஷ்ணுவை மனதார நினைத்து திருவோண நட்சத்திரம் அன்று வீட்டில் அக்னி மூலையான தென்மேற்கு மூலையில் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் மாற்றம் ஏற்படும்.

நம் வீட்டில் அக்னி மூலை மிகவும் முக்கியமானது. அக்னி திசை என்பது மண்ணுக்குரிய திசையாகும். இப்படி மண் கேட்டு மூன்று உலகையும் அளந்தவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான வாமனர். அதனால் அவரை நினைத்து திருவோணம் அன்று விளக்கு ஏற்றி பால் பாயசம் நிவேதனமாக படைத்து வழிபட்டு வந்தாலும் விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.

அடுத்ததாக உங்களிடம் எந்த விளக்கு இருக்கிறதோ அகல் விளக்கு அல்லது காமாட்சி கஜலட்சுமி விளக்கு ஏதாவது ஒன்றை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிகுந்த மலர்களை சாற்றிவிட்டு அந்த விளக்கிற்குள் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு அதன் மீது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு தட்டில் நடுவில் மஞ்சள் குங்குமம் வைத்து அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கு மேல் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விளக்கை அதன் மீது வைத்து விளக்கு ஏற்றங்கள். இந்த விளக்கை காலையில் 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் ஏற்ற வேண்டும். ஐந்து ரூபாய் என்பது குபேரனுக்குரியதாகும். இப்படி இந்த முறையில் விளக்கு ஏற்றும் போது உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் கிடைத்து விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

3 மணத்தியாலங்கள் ago