dreams

அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறதா…? தினமும் தூங்குவதற்கு முன் கட்டாயம் இதை செய்யுங்க…

By admin on கார்த்திகை 29, 2024

Spread the love

நாம் தூங்கும்போது கனவுகள் வருவது எதார்த்தமான ஒன்று. அது கெட்ட கனவாக இருக்கலாம். நல்ல கனவாக இருக்கலாம். நம் கண்ணால் கண்ட காட்சி ஏதாவது வரலாம் இல்லை நாம் சிறுவயதில் நடந்த நிகழ்வுகள் கனவுகளாக வரலாம். ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த கனவுகள் அச்சம் ஊட்டும் வகையில் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

கனவுகள் என்பது பொதுவான அனைவருக்கும் வரக்கூடிய ஒரு விஷயம் என்றாலும் சில நேரத்தில் வரக்கூடிய கெட்ட கனவுகள் நம்மை மிகவும் கவலைக்கு உள்ளாக்கும். எங்கு அது நடந்து விடுமோ என்று ஒரு சிலர் பயத்திலேயே இருப்பர். இதனால் நிம்மதி இல்லாமல் போகும், மன அழுத்தம் உண்டாகும். கவலை போன்றவைகள் இருக்கும். இது போல கெட்ட கனவுகள் வராமல் தடுப்பதற்கு இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கலாம்.

   

அறிவியல் சார்ந்து பார்க்க போனால் கனவுகள் நம் ஆழ்மனதின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். ஆனால் இந்து மத சாஸ்திரத்தின்படி பார்க்கப் போனால் பிரபஞ்ச சக்தி தெய்வ சக்தி தீய சக்தி அனைத்தும் நம்மளை தொடர்பு கொள்ளும் முறையாக கனவுகள் பார்க்கப்படுகிறது. இதற்காகவே கனவுப் பலன்கள் என்ற ஒரு சாஸ்திர நூலே இருக்கின்றது. இருந்தாலும் கெட்ட கனவு வராமல் இருப்பதற்கு மனதை அமைதிப்படுத்தும் செயல்களை இரவு தூங்குவதற்கு முன்பு செய்ய வேண்டும்.

 

தினமும் தூங்குவதற்கு முன்பு கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். ஏதேனும் நல்ல விஷயங்கள் அல்லது நம் வாழ்க்கையில் நடந்த நல்லவைகளை நினைத்து பார்க்கலாம். இது தவிர ஒரு சில சுலோகங்கள் சொல்லும்போது அது நம்மை கெட்ட கனவுகள் வருவதிலிருந்து பாதுகாக்கும்.

காயத்ரி மந்திரம் மூன்று முதல் ஐந்து முறை சொன்னால் கெட்ட கனவுகள் வராமல் இருக்கும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்ற எளிமையான மந்திரத்தை கூறும்போது மனது அமைதி பெறும் அல்லது நமக்கு என்ன இஷ்ட தெய்வங்கள் பிடிக்குமோ அந்த இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கி கொண்டு அந்த தெய்வத்தின் புகைப்படத்தை பார்த்துவிட்டு தூங்கும் பொழுது கெட்ட கனவில் இருந்து நம்மால் விடுபட முடியும்.