அமித்ஷா நாடாளுமன்ற அவைக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸை எதிர்கொள்ள பாஜக தனது அரசியல் வியூகத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சிக்கத் தனது மத்திய அமைச்சர்களுக்கும் செய்தி தொடர்பாளர்களுக்கும் கட்சித் தலைமை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இனி பொதுவெளியிலும் ஊடக விவாதங்களிலும் அவரை ‘ராகுல்ஜி’ என்று மரியாதையுடன் அழைக்காமல் ‘ராகுல்’ என்றே குறிப்பிட வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் #BhagoMat (ராகுல்_ஓடாதீர்கள்) என்ற ஹேஷ்டேக்கை தீவிரமாகப் பரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர் சந்திப்புகளில் பாஜக செய்தி தொடர்பாளர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
