அமாவாசை நாளில் மறந்தும் இதை செஞ்சுராதீங்க… சாஸ்திரங்கள் கூறுவது என்ன தெரியுமா…?

By admin on புரட்டாதி 25, 2024

Spread the love

அமாவாசை நாளில் பொதுவாக நல்ல காரியங்களை தொடங்கக்கூடாது என்று சொல்வார்கள். அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள் ஆகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகும். ஆனால் இது தவிர அமாவாசை நாளில் என்ன செய்யலாம் என்ன கண்டிப்பாக செய்யக்கூடாது என்பதை பற்றி இனி காண்போம்.

   

அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்க்கலாம். வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம் ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. அந்தகாரகனாகிய சந்திரனும் பிதூர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. இந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் படையல் ஆகியவற்றை செய்யும்போது அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் திருமண தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, தீராத நோய், கடன் தொல்லை, கர்மவினை ஆகியவை விலகும்.

   

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அமாவாசை அன்று நம்முடைய வீட்டு வாசலில் முன்னோர்கள் காத்திருப்பார்களாம். அதனால் காலை ஆறு முப்பது மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். யாரெல்லாம் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை ஆராதிக்கிறார்களோ அதனால் கிடைக்கும் பாடல்கள் அவர்களுக்கு மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய் சேரும் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு பிடித்தமான உணவை மதிய வேளையில் படையல் இட்டு குடும்பத்துடன் வணங்க வேண்டும். பின்னர் காகத்துக்கு சமைத்த உணவிலிருந்து எடுத்து வைத்துவிட்டு அதற்கு பின்னர் தான் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் நம் முன்னோரை நினைத்து நான்கு பேருக்கு உணவு வழங்குவது மிகப்பெரிய புண்ணியம் ஆகும்.

 

அமாவாசை தோறும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முன்னோர்கள் நின்றுகொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்திருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம் பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது. அமாவாசை நாளில் பெற்றோர் இல்லாத கணவன் விரதம் இருக்கலாம். ஆனால் மனைவி விரதம் இருக்கக் கூடாது. சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக்கூடாது. அமாவாசை விரத நாளில் மறைந்த மாமனார் மாமியாருக்காக மருமகள் உணவு சமைக்கும்போது வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது. காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகு தான் சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.