தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்யை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதாவிடம் இருந்த அதே திமிர் முதலமைச்சர் விஜய்யிடமும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 1991-இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களிலேயே டான்சி நில விவகாரத்தில் சிக்கியதைப் போல, தவெக அரசு ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டெண்டர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஜெயலலிதாவுக்குக் கடைசியில் என்ன நடந்தது என்பதை தான் சொல்ல விரும்பவில்லை என்றும், விஜய்க்கு இப்போது கேடு காலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
