ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்… வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். குறிப்பாக மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுகவால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆங்காங்கே நிகழ்ச்சிகளை நடத்தி மீண்டும் மக்களுக்கு அரசு நினைவூட்டி வருகிறது.

எப்படியாவது மக்களை மீண்டும் கவர்ந்து ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்நிலையில் விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறி வைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.