“இனி யாருக்கும் அடிபணிய முடியாது” நன்றி கெட்ட கூட்டணி… முறித்துக் கொண்ட ஸ்டாலின்.. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் விஸ்வரூப முடிவு..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனித்துப் போட்டியிடுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் தொகுதி வாரியான வாக்கு நிலவரங்கள் குறித்து திமுக தலைமை நடத்திய விரிவான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் அடிமட்டத் தொண்டர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிகளுக்குள் எழுவது இயல்பானதே. கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்போது, உள்ளூர் அளவில் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வார்டுகளில் நேரடியாகத் தங்கள் கட்சித் தொண்டர்களைக் களம் இறக்கி கட்சியின் அடிமட்ட பலத்தை முழுமையாகச் சோதித்துப் பார்ப்பதற்கும் ‘தனித்துப் போட்டி’ என்ற முடிவு கை கொடுக்கும் என திமுக தலைமை கருதுகிறது.

   

இருப்பினும், இந்த முடிவு தற்காலிக உத்திதானே தவிர, தங்களின் தற்போதைய அரசியல் கூட்டணியில் எந்தவித விரிசலையும் ஏற்படுத்தாது என்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான தேர்தல் என்பது முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் தனிநபர் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இதில் தனித்துப் போட்டியிடுவதுதான் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் நல்லது என்ற கருத்து ஆய்வுக் கூட்டத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் அரங்கில், குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்தியில் தற்போதே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.