மின்மாற்றிகள் மற்றும் நிலக்கரி கொள்முதலில் நடைபெற்ற பெரும் ஊழல்களே தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கு முக்கியக் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிலக்கரி கொள்முதலில் டாலர் கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், திமுக மின்சாரத் துறையை திட்டமிட்டு அழித்துவிட்டு, தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை விலைக்கு வாங்கி ஒட்டுமொத்தத் துறையையும் கடனாளியாக மாற்றியிருப்பதாகக் கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த மின்துறை ஊழல் குறித்த விரிவான மற்றும் உண்மையான அறிக்கை விரைவில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
