“அழுகிய வெங்காயம்… ஓடிய ஓட்டம்”…. ’24-ஆம் புலிகேசி’ ஆட்சி….. Dummy CM-ஐ கிழித்துத் தொங்கவிட்ட உதயநிதி….!

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காகக் கூட்டுறவுத் துறை சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் அழுகிய நிலையில் தரமற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எம்.எல்.ஏ-க்களை வாங்கத் தெரிந்த ‘Dummy CM’-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா என்றும், உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாத வெங்காயம் போலத்தான் இந்த அரசின் செயல்பாடுகளும் இருக்கின்றன என்றும் சாடியுள்ளார்.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து எவ்வித ஆய்வும் செய்யாமல் சுமார் 450 டன் வெங்காயத்தைக் கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம் முற்றிலும் அழுகி நாற்றமெடுத்ததால், அதை மறைப்பதற்காகக் கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே விட்டுவிட்டு ஆட்சியாளர்கள் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாங்கள் வெங்காயம் வாங்கவே இல்லை” என்று அரசே பொய் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் சாடினார்.

அழுகிய வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக லாரியில் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அதன் தரத்தைப் பார்த்த வணிகர்கள் அதை வாங்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் லாரி ஓட்டுநர்கள் தவித்து வருவதாகவும், வெங்காய விலையேற்றத்தால் மக்கள் அவதியுறும் வேளையில், ஆட்சியாளர்கள் இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் ’24-ஆம் புலிகேசி’ என உருவகப்படுத்தி விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே ரேஷன் கடைகளில் ரூ.30-க்கு பொன்னி அரிசி வழங்குவதாகக் கூறிவிட்டு, டெண்டர் விடாமல் வழக்கமான அரிசியைப் போலிஷ் செய்து விற்பனை செய்வது குறித்துத் தான் எழுப்பிய கேள்விக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை நினைவூட்டிய உதயநிதி ஸ்டாலின், இந்தத் தரமற்ற வெங்காயக் கொள்முதலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதையாவது இந்த ‘Dummy CM’ மக்களுக்குத் தெளிவுபடுத்துவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

11 minutes ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

30 minutes ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

38 minutes ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

44 minutes ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

49 minutes ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

1 மணத்தியாலம் ago