பரபரப்பு..! அது உங்க அப்பா வீட்டு சொத்தா..? நாங்க என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா..? மோதிக்கொள்ளும் திமுக -தவெக…!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வண்டலூர், அமிர்தி, குரும்பட்டி ஆகிய மூன்று முக்கிய உயிரியல் பூங்காக்களுக்குக் கட்டணமின்றி இலவசமாகச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த இலவச அனுமதி காரணமாக ஏற்படும் முழு கட்டணச் செலவையும் தங்களது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை ஏற்கும் என்றும் அமைச்சர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தங்களது எக்ஸ் பக்கத்தில் அமைச்சரை நோக்கி, “உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பா வீட்டுச் சொத்தா?” என்று மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலக் கஜானாவில் பணம் இல்லை என்று கூறிவிட்டு, முதல்வரின் பிறந்தநாளுக்காக இரண்டு நாட்கள் பூங்காக்களுக்கு இலவச அனுமதி அளிப்பது ஏன் என்றும், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாட உங்களுக்கு என்ன தைரியம் என்றும் திமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

   

திமுகவின் இந்த விமர்சனத்திற்குத் தவெக தரப்பிலிருந்து, “நாங்கள் என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா, அரசு பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போக?” என்று மிக ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியிலும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மக்கள் பணத்தைக் கரைக்க முயன்ற அறிவாலயம் குழுவினர் தங்களைக் குறை கூறத் தகுதியில்லை என்றும், மிகக் குறைந்த தொகையே கையிருப்பு இருப்பதாகப் பொய் சொல்லிவிட்டு சொகுசு காரில் உலா வரும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ செய்யக்கூடிய வேலைகளைத் தங்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் தவெக தரப்பில் மறுப்புச் சொல்லப்பட்டுள்ளது.