திமுக – அதிமுக கூட்டணி…. ஸ்டாலின் போட்ட பிளான் இதுதான்…. குண்டைத் தூக்கிப் போட்ட சிபிஎம்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக-உடனான சிபிஎம் கட்சியின் நெருக்கம் குறித்து திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த காலங்களில் அதிமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுகவே தங்களை வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வரக்கூடாதா என்ற காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ள அவர், ஒருவேளை திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் அதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றும் வினவியுள்ளார். திமுகவினரின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.