ஆதவ் அர்ஜுனாவை விஜய்யிடம் அனுப்பியதே திமுக தான்… திடீர் பரபரப்பை கிளப்பிவிட்ட முக்கிய பிரபலம்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் எதிர்கொள்ள உள்ளார். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா பற்றி பிரபலம் கூறியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது ஆதவ் அர்ஜுனாவை விஜய் இடம் அனுப்பியதே திமுக தான் என அவரது மைத்துனர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.

சமீபத்தில் இது தொடர்பாக பேசிய அவர், தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்க வைக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்வதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா. விஜய் வேறு எந்த கூட்டணிக்கும் செல்லாமல் இருந்தாலே நாம் ஜெயித்து விடலாம் என்பது திமுகவின் கணக்கு. தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குள் 5 இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே அவர்களை நாம் கவனித்து விட முடியும்.

   

விஜய்யை மூன்றாவது அணியாக இறக்கி எதிர்ப்பு ஓட்டை மீண்டும் மடை மாற்றி ஆட்சியை அமைக்க பார்க்கிறது திமுக. அதற்காக சில காய்களை திமுக நகர்த்தி வருகின்றது. தமிழக வெற்றிக்கலகம் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த போட்டியிடக் கூடாது என்பதை ஆதவ் அர்ஜுனா உடனிருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகின்றார். தமிழக வெற்றிக்கழகம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா செல்லும் இடங்களில் பிரச்சனைகளும் குழப்பங்களும் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது என்று அவர் தற்போது கூறியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.