திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக ஈரோடு வீரமணி ஜெயக்குமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நியமனத்தின் மூலம் திமுக வரலாற்றிலேயே மாநில மாணவரணி செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை வீரமணி ஜெயக்குமார் பெற்றுள்ளார். கட்சியின் மிக முக்கியமான அணிகளில் ஒன்றான மாணவரணிக்கு ஒரு பெண் தலைமையை வழங்கியிருப்பது அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜீவ் காந்தி, தற்போது கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிர்வாகிகள் மாற்றத்தை திமுக மேற்கொண்டுள்ளது.
