“திமுகவின் அடுத்த தலைமை சபரீசனா?”…. ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய முக்கிய புள்ளி… பரபரப்பு பேட்டி….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளிக்குடியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திமுகவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவின் வலிமையையும், தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் போற்றிய அவர், திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி பலவீனம் குறித்து சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சர் கே.என். நேரு சிக்கலில் இருக்கும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாதது கட்சிக்குள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக உதயகுமார் சுட்டிக்காட்டினார். திமுக அரசு உண்மையிலேயே வலிமையாக இருந்தால், மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தால், தொடர்ந்து மாநாடுகளை நடத்தித் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த நடவடிக்கைகள் திமுகவின் நடுக்கத்தையே காட்டுகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

   

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்று அடித்துச் கூறிய ஆர்.பி. உதயகுமார், தேர்தலுக்குப் பிறகு திமுகவில் ஒரு அதிரடி மாற்றம் நிகழும் என்று கணித்துள்ளார். ஆந்திரப் பிரதேச அரசியலில் நடந்தது போல, ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு, அவரது மருமகன் சபரீசன் திமுகவின் தலைமையைக் கைப்பற்றுவார் என்று அவர் பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிகளை வாரி வழங்குவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும், அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவை மக்கள் வரும் தேர்தலில் தோற்கடித்து, எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவார்கள் என்றும் உதயகுமார் தனது பேச்சில் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.