Categories: அரசியல்

ஒரே நாளில் மாறிய திமுகவின் பொலிட்டிக்கல் மேப்… அன்பில் மகேஷ், சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் வைத்த ஆப்பு…. மிரண்டுபோன சீனியர்கள்…!

Spread the love

திமுகவின் உட்கட்சி நிர்வாகத்தைச் சீரமைக்கவும், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் வசதியாக, கழக உட்கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் கீழ், தலைநகர் சென்னையில் இதுவரை இருந்த 6 உட்கட்சி மாவட்டங்கள் தற்போது 10-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் 3 உட்கட்சி மாவட்டங்களாகவும், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் தலா 2 உட்கட்சி மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்புதிய கட்டமைப்பு மாற்றத்தில் முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புப் பங்கீடுகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு துறைமுகம், திரு.வி.க. நகர் (தனி), வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தற்போது திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உட்கட்சி அதிகார அமைப்பில் கணிசமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

Nanthini

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

47 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago