ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்…. திமுக எடுக்கப் போகும் விபரீத முடிவு…. அதிரடியாக களமிறங்கும் உதயநிதி – கனிமொழி….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, திமுக தலைமையை கலந்தாலோசிக்காமல் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தியின் வெளிப்பாாடாகவே, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு எதிராக திமுக தலைமை கடுமையான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

   

டெல்லியில் திமுகவின் அரசியல் பலம் அறிந்திருந்தும், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, திமுக எம்பி கனிமொழி, மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என அஞ்சும் ‘சிஜேபி’ கட்சிக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர் அணி குரல் கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இதற்கிடையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தவும், அதற்கான மாற்று அரசியல் பிம்பங்களை உருவாக்கவும் திமுக தலைமை தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

திமுகவின் இந்த அதிரடி மாற்றங்கள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பிளவை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் புதிய கூட்டணிக் சமன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் திமுக களமிறங்கியுள்ளதால், தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது.