ஆகஸ்ட் 5-ல் காத்திருக்கும் பேரதிர்ச்சி… சட்டசபையில் விஜய்க்கு திமுக வைக்கப்போகும் ‘பட்ஜெட்’ செக்…. உதயநிதி போட்ட சீக்ரெட் ஆர்டர்…..!

Spread the love

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. இக்கூட்டத்தொடருக்குள் இரண்டு முக்கிய விவகாரங்களில் தீவிரமாகச் செயல்பட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவெக தலைவர் விஜய்க்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்து தவெக தரப்பு நகர்த்திய காய்களுக்கு திமுக சட்டரீதியான தடுப்பணையை அமைத்துள்ளது.

ஆட்சியை கவிழ்க்க லஞ்சம் கொடுத்த வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜியைச் சுற்றி வளைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமலாக்கத்துறையின் வழக்கைத் தொடர்ந்து மாநில லஞ்ச ஒழிப்புத் துறையும் புதிய வழக்குகளைப் பதிவு செய்து, ஆதாரங்களைத் திரட்டி கைது நடவடிக்கை வரை செல்லத் திட்டமிட்டது. ஆனால், இந்த வியூகத்தை உன்னிப்பாகக் கவனித்த திமுக தலைமை, உச்சநீதிமன்றத்தின் மூலம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு முன்ஜாமீன் பெற உதவியுள்ளது. இதன் மூலம் தவெகவின் கைது திட்டத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை தவெகவிற்கு எதிரான பிரதான ஆயுதமாகப் பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. தவெக அறிவித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் பெருமளவில் நிதி ஆதாரம் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிதிச்சூழலில் அத்தனை வாக்குறுதிகளையும் பட்ஜெட்டில் பூர்த்தி செய்வது கடினம் என்பதை திமுக கணித்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, தவெகவைச் சட்டமன்றத்திற்குள் கடுமையாக நெருக்க வேண்டும் என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தால் எப்படிச் செயல்படும் என்பதை ஆளும் தரப்பிற்கு உணர்த்த வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. தவெக கட்டமைக்க முயலும் அரசியல் பிம்பத்தைச் சட்டமன்ற விவாதங்கள் மூலம் உடைப்பதே திமுகவின் நோக்கமாகும். இதனால், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்சிகளுக்கும் இடையிலான காரசாரமான அரசியல் போர்க்களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago