தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை 40 தொகுதிகள் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது தன்னுடைய எண்ணிக்கையை உயர்த்தி திமுகவிடம் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் இடையேயான சுமூகமான உறவு இந்த விரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தமிழக வெற்றி கழகம் கட்சியின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைத்து ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும் கூட்டணி அமைப்புக்குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுப்பறி நீடித்துவரும் நிலையில் தற்போது இவருடைய இந்த பேச்சை காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணைய உள்ளதை ஏறத்தாழ உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கங்கள் தெரிவிக்கின்றனர்.
