“அங்கிள்” விஜய் சொன்ன ஒருவார்த்தைக்காக… மனைவியை பார்த்துக்கொள்ள முடியாதவர், நாய் என… அநாகரீகமாக விமர்சித்த திமுக MLA-க்கள்..!!

By Srimathi on ஆவணி 25, 2025

Spread the love

மதுரையில் நடந்த த.வெ.க  மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், திமுகவை குறித்து பல்வேறு முரணான கருத்துக்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக “ஸ்டாலின் அங்கிள்” என்று முதலமைச்சரை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் “சூரியனை பார்த்து நாய் குறைக்கும், ஆனால் நாய் மீது சூரியன் ஒருபோதும் கோபப்படுவதில்லை” என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும் “அப்பா, அம்மா, மனைவியை பார்த்துக் கொள்ள முடியாதவர், எப்படி மக்களை பார்த்துக்கொள்வார்?” என்று திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார். இப்படி விஜயின் கருத்துக்கு, திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருமையில் விமர்சித்ததால், த.வெ.க தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.