பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைமையிடமே நேரடியாகத் தெரிவித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் செலவுகளால் தனக்கு ஏற்பட்ட பெருமளவிலான கடன்களுக்கு கட்சித் தலைமையே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தஞ்சை மாவட்டச் செயலாளர் மற்றும் எம்பி முரசொலி ஆகியோரை அனுப்பி அசோக் குமாரைச் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. கட்சித் தலைமையின் சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் அவர்கள் அளித்த சில முக்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், அதிருப்தியில் இருந்த அசோக் குமார் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு திமுகவிலேயே நீடிக்கச் சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
