2026 சட்டமன்றத் தேர்தல் களம் திண்டுக்கல் மாவட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திண்டுக்கல் தொகுதியில், அனுபவம் வாய்ந்த சீனியர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து, திமுகவின் இளம் முகமான ஐ.பி. செந்தில்குமார் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மூன்று தேர்தல்களை மட்டுமே சந்தித்திருக்கும் ஐ.பி.எஸ்-க்கு ஆதரவாக, அவரது தந்தை அமைச்சர் ஐ. பெரியசாமியும், மற்றொரு அமைச்சரான சக்கரபாணியும் கைகோர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது திண்டுக்கல் திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது.
திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி தரப்புக்கு இடையே நிலவி வந்த பனிப்போர் ஊரறிந்த விஷயம். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களை வீழ்த்தினால் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற தலைமையின் உத்தரவாலும், மாவட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும் தற்போது இரு அமைச்சர்களும் மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் திரண்டுள்ளனர். மேலும், ஓரங்கட்டப்பட்டிருந்த சுப. பெருமாள்சாமி, முன்னாள் சேர்மன் நடராஜன் போன்ற பழைய முகங்களை ஐ.பெரியசாமி மீண்டும் அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளது திமுகவின் களப்பணியை பலப்படுத்தியுள்ளது.
மறுபுறம், அதிமுக முகாமில் நிலைமை தலைகீழாக உள்ளது. திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் கட்சியின் தூண்களாகப் பார்க்கப்பட்டாலும், இந்தத் தேர்தலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாக்கு சேகரிக்காமல் தத்தமது தொகுதிகளோடு முடங்கிக் கிடப்பது தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நத்தம் விஸ்வநாதனுக்கு ஆதரவாக சீனிவாசனும், சீனிவாசனுக்கு ஆதரவாக நத்தம் விஸ்வநாதனும் இதுவரை ஒருமுறை கூட மேடை ஏறாதது, அதிமுகவின் “ரத்தத்தின் ரத்தங்கள்” மத்தியில் பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசனின் உள்ளடி வேலைகளால் சீட் கிடைக்காமல் போன அதிருப்தியில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகவே வேலை பார்க்கத் தயாராகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆளுங்கட்சி என்ற மிதப்பு இல்லாமல், ஒரு ஜூனியர் வேட்பாளருக்காக இரண்டு சீனியர் அமைச்சர்கள் ஒன்றுபட்டு வேலை செய்யும் திமுகவின் வேகம், அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்விகளைத் தவிர்க்கப் போராடி வரும் வேளையில், திண்டுக்கல்லின் முக்கியத் தலைவர்களிடையே நிலவும் இந்த ஒத்துழையாமை மற்றும் உட்கட்சிப் பூசல் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுகவின் ஒற்றுமைக்கும் அதிமுகவின் விரிசலுக்கும் இடையிலான இந்தப் போர் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…