திமுக தலையில் பேரிடி..! காங்கிரஸ் கூட்டணிக்காக விஜய் போட்ட ஸ்கெட்ச்… ராகுல்-விஜய் சந்திப்பை தடுக்கும் முயற்சியில் DMK தலைமை..!

By Soundarya on ஆவணி 27, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தற்போது ஜனநாயகன்  படத்தின் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக மக்கள் சந்திப்பை தொடங்கி முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாக அவர் அறிவித்தார். அதன்படி செப்டம்பர் 15 முதல்  மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க இருக்கிறார். திமுக கட்சியை கடுப்பேற்றுவதற்காகவே அண்ணாதுரை பிறந்த நாளில் நடைப்பயணத்தை தொடங்க உள்ளார்.

இதனிடையே கூட்டணி தொடர்பாகவும் விஜய் பேச்சு நடத்தி வருகிறார். காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது பீகாரில் ராகுல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் பங்கேற்க பல சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்யை பிஹாருக்கு அழைத்துச் சென்று ராகுலோடு கைகோர்க்க வைக்க தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு விஜய் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளிஆகியுள்ளது.  இதனை அறிந்த திமுக தலைமை ராகுல்- விஜய் சந்திப்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உதவியோடு தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.