Breaking: காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல் கட்சி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

By Nanthini on பங்குனி 4, 2026

Spread the love

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தற்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இழுபறி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியை எப்படியாவது உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் களமிறக்கப்பட்ட போதிலும், முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே தெரிகிறது.

ஆரம்பத்தில் 40 இடங்கள் வரை கேட்டு வந்த காங்கிரஸ், தற்போதைய சூழலில் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டு இறங்கி வந்தாலும், திமுக தரப்போ ’28+1′ என்ற கணக்கில் மட்டுமே உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் நிர்வாகிகள் விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாக எழுந்துள்ள தகவல், கூட்டணியில் புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதோ என்ற விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் கிளப்பியுள்ளது.