2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கட்சியின் சின்னமும் அங்கீகாரமும் தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் இருப்பதால், அவர் ஏற்கனவே அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துவிட்டார். இருப்பினும், “கட்சியைத் தொடங்கியது நான் தான், கூட்டணியை நானே முடிவு செய்வேன்” எனக் கூறி வரும் ராமதாஸுடன் அமைச்சர்கள் மூலம் திமுக தலைமை ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுகவின் இந்த முயற்சிக்குத் திராவிட மாடல் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ராமதாஸ் உள்ளே வந்தால் தாங்கள் வெளியேற நேரிடும் எனத் திருமாவளவன் தரப்பு எச்சரித்து வரும் நிலையில், இதற்குப் பின்னணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெக-விடம் விசிக ரகசியத் தொடர்பில் இருப்பதால், பாமகவைச் சாக்காக வைத்து திமுக கூட்டணியிலிருந்து வெளியேற விசிக திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக காங்கிரஸ்…
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நூதன முறையில் திருமண மோசடி செய்து வந்த ஒரு பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிபிஎம் (CPM) கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…