தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கப்படும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு ரொக்க தொகையை இதுவரை இல்லாத அளவில் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத் தொகையாக 3000 ரூபாய் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையும் வரவு வைக்கப்படும் என்பதால் மொத்தமாக 4000 ரூபாய் கிடைக்கலாம்.
